Karaikal Padaal Petra Sivan Temples




                                               

                                             Karaikkal


1
Thirunallaru – திருநள்ளாறு
+91 4368 - 236 530, 236 504, 94422 36504
52
Kaveri out 127 temples




2
Dharumapuram – திருதர்மபுரம்
+91- 4368 - 226 616.
51
Kaveri out 127 temples




3
Vettakkudi – திருவேட்டக்குடி
+91- 4368 - 265 693, 265 691, 98940 51753.
49
Kaveri out 127 temples




4
Thiruthelicheri, Kovilpathu - திருதெளிச்சேரி (கோயில்பத்து)
+91- 4368-221 009, 97866 35559.
50
Kaveri out 127 temples




5
Kottaaru, Kottaram – திருக்கோட்டாறு – 04368-261447
Bus No.488
53
Kaveri out 127 temples



52. தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில், திருநள்ளாறு
சிவஸ்தலம் பெயர்
திருநள்ளாறு
இறைவன் பெயர்
தர்ப்பாரண்யேஸ்வரர்
இறைவி பெயர்
பிராணம்பிகை, போகமார்த்த பூன்முலையாள்
பதிகம்
திருநாவுக்கரசர் 2, திருஞானசம்பந்தர் 4,  சுந்தரர் - 1
எப்படிப் போவது
காரைக்காலில் இருந்து மேற்கே 6 கி.மி. தொலைவில் திருநள்ளாறு ஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. திருநள்ளாறு நவக்ரஹ ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலம் ஆகும். பாடல் பெற்ற சிவஸ்தலம் திருதருமபுரம் அருகிலுள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருநள்ளாறு, காரைக்கால் வட்டம், புதுச்சேரி மாநிலம் PIN - 609607
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.


51. யாழ்முறிநாதர் கோவில், திருதருமபுரம்
சிவஸ்தலம் பெயர்
திருதருமபுரம்
இறைவன் பெயர்
யாழ்முறிநாதர், தர்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்
மதுர மின்னம்மை, தேனமிர்தவல்லி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
இத்தலம் காரைக்கால் நகரில் இருந்து மேற்கே திருநள்ளாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றவுடன் இடதுபுறம் காணப்படும் மாதா கோவில் அருகில் திரும்பிச் சென்று (பாதையில் சாலை பிரியுமிடத்தில் பெயர்ப் பலகையும் உள்ளது), பின் வலதுபுறமாகச் சென்று இத்தலத்தை அடையலாம். காரைக்காலில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவு. திருதெளிச்சேரி என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் காரைக்கால் நகரில் கோயில்பத்து என்ற இடத்திலுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலம் திருநள்ளாறும் இங்கிருந்து அருகிலுள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோவில்
தருமபுரம், காரைக்கால் அஞ்சல், புதுச்சேரி மாவட்டம் PIN - 609602
நினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


49. திருமேனி அழகர் கோவில், திருவேட்டக்குடி
சிவஸ்தலம் பெயர்
திருவேட்டக்குடி
இறைவன் பெயர்
திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்
சௌந்தரநாயகி, சாந்தநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
புதுச்சேரி மாவட்டத்தின் ஒரு பகுதியான காரைக்கால் வட்டத்தில் இத்தலம் இருக்கிறது. காரைக்காலில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. தரங்கம்பாடியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் வரிச்சக்குடி என்ற ஊர் வரும். அங்கிருந்து இடதுபுறம் கிழக்கே செல்லும் கிளைச்சாலையில் சுமார் 2 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு திருமேனி அழகர் திருக்கோவில்
திருவேட்டக்குடி, வரிச்சக்குடி அஞ்சல், காரைக்கால் வட்டம்,
புதுச்சேரி மாவட்டம்
PIN - 609610
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையும் திறந்திருக்கும்.


50. பார்வதீஸ்வரர் கோவில், திருதெளிச்சேரி
சிவஸ்தலம் பெயர்
திருதெளிச்சேரி (தற்போது கோயில்பத்து என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
பார்வதீஸ்வரர்
இறைவி பெயர்
ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி, சக்திநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
இத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக இருக்கிறது. கோவில் உள்ள பகுதி கோயில்பத்து என்று வழங்குகிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் நாகூர்.
ஆலய முகவரி
அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில்
கோயில்பத்து, காரைக்கால் அஞ்சல், புதுச்சேரி மாநிலம்
PIN - 609602
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.


53. ஐராவதேஸ்வரர் கோவில், திருகோட்டாறு
சிவஸ்தலம் பெயர்
திருகோட்டாறு (தற்போது திருக்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்
ஐராவதேஸ்வரர்
இறைவி பெயர்
வண்டார் பூங்குழலி அம்மை, சுகந்த குந்தளாமிபிகை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது
காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் திருகோட்டாறு தலம் இருக்கிறது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டியபிறகு திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவு வரும். அங்கிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
திருக்கொட்டாரம், நெடுங்காடு வழி, திருவாரூர் மாவட்டம் PIN - 609603
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 11-30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


1 comment: