Mannargudi Padaal Petra Sivan Temples











                                        Mannargudi Padaal Petra Sivan Temples










1
Kovil Venni – திருவெண்ணியூர் – Gurukul Name Raja +91- 9626769423
On the main road to Tanjore to Thiruvarur before Needamangalam
102
Kaveri out 127 temples








2
Paadhalecharam, Paamani – திருப்பாதாளீச்சரம் - +91- 93606 85073
Town bus A-37 from Mannarkudi
104
Kaveri out 127 temples








3
Thirupoovanur – திருப்பூவனூர் - +91-94423 99273.
A-67 Town bus  from Mannarkudi to Kaalacheri
103
Kaveri out 127 temples








4
Kottur – திருக்கோட்டூர் - +91- 4367 - 279 781, 97861 51763.
Town bus No.16 from Mannarkudi to Tiruvarur
111
Kaveri out 127 temples








5
Thiruppaereyil, Ogaiperaiyur – திருப்பேரெயில் - 91- 4367 - 237 692
Thiruvarur Bus stand and the route nos are 353 ( Thiruvarur to Vikrapandiyam / Kottur  and A32  ( Thiruvarur to Vadivaikkal )
114
Kaveri out 127 temples








6
Thirunellikka – திருநெல்லிக்கா - +91- 4369-237 507, 237 438.
On the bus route Thiruvarur to Thiruthuraipoondi after (14 KM) Pudur, Thiru Nellikka.
Town bus is available from Thiruvarur to Thirukkollikkadu passes through this village.
117
Kaveri out 127 temples








7
Naattiyathankudi – திருநாட்டியாத்தான்குடி - +91- 4367 - 237 707, 94438 06496.
On the bus route Thiruvarur to Thiruthuraipoondi getdown at Maavur Koot road and from there  The temple is on the way tto Vadapathi mangalam.
118
Kaveri out 127 temples








8
Thiruvendurai, Vandurai – திருவெண்டுறை - +91- 4367-294 640
Town bus from Mannarkudi to Veeraki passes through this place.
Town bus from Mannarkudi to Sethangudi passes through this place.
112
Kaveri out 127 temples








9
Thirukkalar – திருக்களர் - +91- 4367 - 279 374
Town mini bus available from Thiruthuraipoondi.
The place Thirupathur is on the Thiruthuraippondi to Mannarkudi and from there 4 KM off main road.
105
Kaveri out 127 temples




















102. கரும்பேஸ்வரர் கோவில், திருவெண்ணியூர்
சிவஸ்தலம் பெயர்
திருவெண்ணியூர் (தற்போது கோயில் வெண்ணி என்ற பெயரில் அறியப்படுகிறது)
இறைவன் பெயர்
வெண்ணிக்கரும்பர், வெண்ணி நாதர், கரும்பேஸ்வரர்
இறைவி பெயர்
அழகிய நாயகி, செளந்தர நாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் 2, திருஞானசம்பந்தர் 1
எப்படிப் போவது
தஞ்சாவூரில் இருந்து சாலியமங்கலம், அம்மாபேட்டை வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில் சாலியமங்கலத்தை அடுத்து வரும் கோயில் வெண்ணி நிறுத்தத்தில் இறங்கி பிரதான சாலையில் இருந்து பிரியும் ஒர் கிளைச் சாலையில் சுமார் 1 கி மி. சென்று இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 26 கி.மி. தொலைவில் உள்ளது. பூஜைப் பொருட்கள் ஆலயத்தின் அருகில் கிடைப்பது அரிதானதால், அவற்றை அருகிலுள்ள் பெரிய ஊரில் வாங்கிக் கொண்டு செல்வது நல்லது.
ஆலய முகவரி
அருள்மிகு வெண்ணிக்கரும்பேஸ்வரர் திருக்கோயில்
கோயில் வெண்ணி, கோயில் வெண்ணி அஞ்சல்,
நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 614403

தினந்தோறும் காலை 10 மணி முதல் 11 மணி, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.



104. நாகநாதசுவாமி கோவில், திருப்பாதாளீச்சரம்
சிவஸ்தலம் பெயர்
திருப்பாதாளீச்சரம் (தற்போது பாமணி என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
நாகநாதசுவாமி, சர்ப்ப புரீசுவரர்
இறைவி பெயர்
அமிர்தநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
மன்னார்குடிக்கு வடக்கே நகர எல்லையில் 2 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மன்னார்குடியிலிருந்து பாமணிக்குச் செல்லும் சாலையில் சென்று, பாமணியை அடைந்து, அங்குள்ள உரத் தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். மன்னார்குடியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு
ஆலய முகவரி
அருள்மிகு சர்ப்ப புரீசுவரர் திருக்கோயில்
பாமணி, வழி மன்னார்குடி, மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 614014
தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


103. புஷ்பவன நாதர் கோவில், திருப்பூவனூர்
சிவஸ்தலம் பெயர்
திருப்பூவனூர்
இறைவன் பெயர்
புஷ்பவன நாதர், சதுரங்கவல்லபநாதர்
இறைவி பெயர்
கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் 1
எப்படிப் போவது
மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில் மன்னார்குடியில் இருந்து 8 கி.மி. தொலைவிலும், நீடாமங்கலத்தில் இருந்து 3 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. திருவாரூர், நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் கோயிலை அடையலாம். ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் உள்ளது. பாலத்தில் போகும்போது பார்த்தாலே கோபுர தரிசனம் கிட்டும். மன்னார்குடி - அம்மாப்பேட்டை, வலங்கைமான் - மன்னார்குடி நகரப் பேருந்துகள் பூவனூர் வழியாகச் செல்கின்றன. இவற்றில் வந்து பூவனூர் நிறுத்தத்தில் இறங்கிக் கோயிலை அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு புஷ்பவன நாதர் திருக்கோயில்
பூவனூர், பூவனூர் அஞ்சல், திருவாரூர் மாவட்டம் PIN - 612803
தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி திறந்திருக்கும்.


111. கொழுந்தீசர் கோவில், திருக்கோட்டூர்
சிவஸ்தலம் பெயர்
திருக்கோட்டூர்
இறைவன் பெயர்
கொழுந்தீசர், சமீவனேஸ்வரர்
இறைவி பெயர்
மதுரபாஷிணி, தேனார்மொழியாள், தேனாம்பாள்
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
மன்னார்குடியில் இருந்து தென்கிழக்கே திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. இத்தலத்திற்குப் பக்கத்தில் திருக்களர், திருவெண்டுறை ஆகிய பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள் உள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு கொழுந்தீசர் திருக்கோயில்
கோட்டூர், கோட்டூர் அஞ்சல், (வழி) மன்னார்குடி,
மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 614 708

தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


114. ஜகதீசுவரர் கோவில், திருப்பேரெயில்
சிவஸ்தலம் பெயர்
திருப்பேரெயில் (தற்போது ஓகைப்பேரையூர் என்றும் வங்காரப் பேரையூர் என்றும் வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
ஜகதீசுவரர்
இறைவி பெயர்
பெண்ணமிர்த நாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது
திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கமலாபுரத்திற்கு அடுத்துள்ள மூலங்குடி சென்று இத்தலத்தை அடையலாம். திருவாரூரில் இருந்து மாவூர்ரோடு - வடபாதி மங்கலம் சாலை வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். இத்தலத்தினை சுற்றிலும் தென்கிழக்கே தலையாலங்காடு, வடமேற்கே திருநாட்டியத்தான்குடி, தென்மேற்கே திருவாரூர், வடகிழக்கே திருவெண்டுதுறை ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு ஜகதீசுவரர் திருக்கோயில்
ஓகைப்பேரையூர், வடபாதிமங்கலம் அஞ்சல்,
திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 610206

தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.



117. நெல்லிவன நாதேசுவரர் கோவில், திருநெல்லிக்கா
சிவஸ்தலம் பெயர்
திருநெல்லிக்கா
இறைவன் பெயர்
நெல்லிவன நாதேசுவரர்
இறைவி பெயர்
மங்களநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருவாரூரில் இருந்து தெற்கே 13 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி 4 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு நகரப் பேருந்து வசதியுள்ளது. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் திருதெங்கூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு நெல்லிவன நாதேசுவரர் திருக்கோவில்
திருநெல்லிக்காவல், திருநெல்லிக்காவல் அஞ்சல்,
திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 610205

தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



118. மாணிக்கவண்ணர் கோவில், திருநாட்டியாத்தான்குடி
சிவஸ்தலம் பெயர்
திருநாட்டியாத்தான்குடி
இறைவன் பெயர்
மாணிக்கவண்ணர், ரத்னபுரீசுவரர்
இறைவி பெயர்
மாமலர் மங்கை, ரத்னபுரீசுவரி
பதிகம்
சுந்தரர் - 1
எப்படிப் போவது
திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடில் இறங்கி அங்கிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சாலையோரத்தில் ஊர் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில்
திருநாட்டியாத்தான்குடி, வழி மாவூர் S.O., திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 610202

தினந்தோறும் காலை 9 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


112. வெண்டுறைநாதர் கோவில், திருவெண்டுறை
சிவஸ்தலம் பெயர்
திருவெண்டுறை (தற்போது திருவண்டுதுறை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
வெண்டுறைநாதர், மதுவனேஸ்வரர்
இறைவி பெயர்
வேல்நெடுங்கண்ணி அம்மை, சத்யதாயதாக்ஷி, பிரஹதாம்பாள்
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
மன்னார்குடியில் இருந்து 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் வீராக்கி என்ற இடத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம். மன்னார்குடி - வீராக்கி செல்லும் நகரப் பேருந்துகள், மன்னார்குடி - சேந்தங்குடி செல்லும் நகரப் பேருந்துகள் வண்டுதுறை வழியாகச் செல்கின்றன.
ஆலய முகவரி
அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்
திருவண்டுதுறை, திருவண்டுதுறை அஞ்சல், மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 614717

தொலைபேசி: 04367 294640 கீர்த்திவாச சிவாச்சாரியார்

தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


105. களர்முலை நாதேசுவரர் கோவில், திருக்களர்
சிவஸ்தலம் பெயர்
திருக்களர்
இறைவன் பெயர்
களர்முலை நாதேசுவரர், பாரிஜாதவனேஸ்வரர்
இறைவி பெயர்
இளம்கொம்பன்னாள், அமுதவல்லி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்
திருக்களர், திருவாரூர் மாவட்டம் PIN - 614720

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-302 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



No comments:

Post a Comment