Thiruthuraipoondi Padaal Petra Sivan Temples











                                        Thiruthuraipoondi Padaal Petra Sivan Temples










1
Thandalai Neelneri - திருத்தண்டலை நீணெறி - +91- 98658 44677
110
Kaveri out 127 temples








2
Kaichinnam – திருகைச்சினம் - +91 94865 33293
The place Kaichinam is on the bus route Thiruvarur to Thiruthuraipoondi
122
Kaveri out 127 temples








3
Thiruthengoor – திருதெங்கூர் - +91- 4369 237 454, 94443- 54461
Town bus A12 from thiruvarur - temple mobile is 9443753808.
116
Kaveri out 127 temples








4
Thirukkollikkadu – திருக்கொள்ளிக்காடு – Poungu Sani Temple
115
Kaveri out 127 temples



 Bus No. 12-A from Thiruvarur - +91- 4369 - 237 454, +91- 4366 - 325 801
From Thiruthuraipoondi 12B, 70A, 102, 7, 5, 21A




5
Thiruchitremam – திருசிற்றேமம் - +91- 94427 67565.
On the bus route Thiruvarur to Thiruthurai Poondi get down at  Alathampadi from there  Chithaimoor  is 3 KM.
106
Kaveri out 127 temples








6
Idumbaavanam – திருஇடும்பாவனம் - +91- 4369 - 240 349, 240 200.
The town bus from Thiruthuraipoondi to Thondiyakadu passes through this place.
Mini bus available from Muthupettai.
Bus also available from Voimedu
108
Kaveri out 127 temples








7
Thirukkadikulam, Karpaganadharkulam, Karpaganarkoil – திருக்கடிக்குளம்
Phone - +91- 4369 - 240 632
The town bus from Thiruthuraipoondi to Thondiyakadu passes through this place.
Mini bus available from Muthupettai.
Bus also available from Voimedu
109
Kaveri out 127 temples








8
Thiruvuchaathanam, Koviloor – திருவுசத்தானம்
+91- 4369 - 262 014, 99420 39494
Buses available from Thiruthuraipoondi, mannarkudi, Vedharanya, Pattukkottai to Muthupettai.
107
Kaveri out 127 temples

























110. நீள்நெறிநாதர் கோவில், திருத்தண்டலைநீள்நெறி
சிவஸ்தலம் பெயர்
திருத்தண்டலைநீள்நெறி (தற்போது தண்டலச்சேரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
நீள்நெறிநாதர், ஸ்திர புத்தீசுவரர்
இறைவி பெயர்
ஞானாம்பிகை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மி. தொலைவில் தண்டலச்சேரி கிராமம் இருக்கிறது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோவில்
தண்டலச்சேரி கிராமம்
வேளூர் அஞ்சல்
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 614715

தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


122. கைச்சின நாதேசுவரர் கோவில், திருகைச்சினம்
சிவஸ்தலம் பெயர்
திருகைச்சினம் (தற்போது கச்சனம் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
கைச்சின நாதேசுவரர்
இறைவி பெயர்
வேள்வளையம்மை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும், திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் ஊள்ளது. திருகொள்ளிலி, திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு கைச்சின நாதேசுவரர் திருக்கோவில்
கச்சனம், கச்சனம் அஞ்சல், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN 610201

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



116. வெள்ளிமலைநாதர் கோவில், திருதெங்கூர்
சிவஸ்தலம் பெயர்
திருதெங்கூர்
இறைவன் பெயர்
வெள்ளிமலைநாதர், ரஜதகீரிஸ்வரர்
இறைவி பெயர்
பெரியநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருவாரூரில் இருந்து 15 கி.மி. தொலைவிலும், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நானகு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி திருநெல்லிக்காவல் சென்று அதே சாலையில் மேலும் 2 கி.மி. சென்றால் திருதெங்கூர் தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோவில்
திருத்தங்கூர், திருநெல்லிக்காவல் அஞ்சல், திருத்துறைப்பூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN – 610205. காலை 9 மணி to 12 மணி and மாலை 5 மணி to இரவு 7-30 மணி திறந்திருக்கும்.


115. அக்னீசுவரர் கோவில், திருகொள்ளிக்காடு
சிவஸ்தலம் பெயர்
திருகொள்ளிக்காடு
இறைவன் பெயர்
அக்னீசுவரர், தீவண்ணநாதர்
இறைவி பெயர்
பஞ்சினும் மெல்லடியம்மை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள ஆலட்டம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி 4 கி.மி. சென்றால் முதலில் திருநெல்லிக்காவல் தலமும் அடுத்து 2 கி.மி. தொலைவில் திருதெங்கூர் தலமும் அதையடுத்து மேலும் 4 கி.மி. சென்றால் திருகொள்ளிக்காடு தலத்தை அடையலாம். இத்தலத்திற்கு கச்சனத்திலிருந்து மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்
திருக்கொள்ளிக்காடு, கீராலத்தூர் அஞ்சல், (வழி) திருநெல்லிக்காவல்,
திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN – 610205.
காலை 7 மணி to 11-30 மணி மாலை 5 மணி to இரவு 7-30 மணி திறந்திருக்கும்.


106. பொன்வைத்த நாதேசுவரர் கோவில், திருச்சிற்றேமம்
சிவஸ்தலம் பெயர்
திருச்சிற்றேமம்
இறைவன் பெயர்
பொன்வைத்த நாதேசுவரர், சுவர்ண ஸ்தாபனேஸ்வரர்
இறைவி பெயர்
அகிலாண்டேஸ்வரி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் ஆலத்தம்பாடி வந்து அங்கிருந்து சித்தாய்மூர் என்ற கைகாட்டி உள்ள இடத்தில் கிழக்கே பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மி. சென்றால் இத்தலம் அடையலாம். போக்குவரத்து வசதிகள் குறைவானதால் தனி வாகனத்தில் செல்வது நல்லது.
ஆலய முகவரி
அருள்மிகு சுவர்ணஸ்தாபனேஸ்வரர் திருக்கோயில்
சித்தாய்மூர்
சித்தாய்மூர் அஞ்சல், பொன்னிறை - S.O.,
திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 610203

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9-30 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


108. சற்குணநாதேசுவரர் கோவில், திருஇடும்பாவனம்
சிவஸ்தலம் பெயர்
திருஇடும்பாவனம்
இறைவன் பெயர்
சற்குணநாதேசுவரர்
இறைவி பெயர்
மங்களநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருத்துறைப்பூண்டியில் இருந்து தென்மேற்கே 16 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை போன்ற இடங்களில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன. திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் நகரப் பேருந்து இத்தலத்திற்குச் செல்கிறது. முத்துப்பேட்டை - வேதாரண்யம் பேருந்து சாலையில் பயணித்தும் இத்தலத்தை அடையலாம். திருக்கடிக்குளம் இத்தலத்திலிருந்து 1 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு சற்குணநாதேசுவரர் திருக்கோயில்
இடும்பாவனம், இடும்பாவனம் அஞ்சல், திருவாரூர் மாவட்டம் PIN - 614735

தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


109. கற்பகநாதர் கோவில், திருக்கடிக்குளம்
சிவஸ்தலம் பெயர்
திருக்கடிக்குளம் (தற்போது கற்பகநாதர் குளம் என்றும் கற்பகனார் கோவில் என்றும் வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
கற்பகநாதர்
இறைவி பெயர்
சௌந்தரநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால் 18 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி இத்தலத்திற்கு உள்ளது. திருஇடும்பாவனம் இத்தலத்திலிருந்து 1 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில்
கற்பகநாதர்குளம், கற்பகநாதர்குளம் அஞ்சல், குன்னலூர். S.O.,
திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 614703

தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


107. மந்திர புரீசுவரர் கோவில், திருவுசத்தானம்
சிவஸ்தலம் பெயர்
திருவுசத்தானம் (கோயிலூர் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்
மந்திர புரீசுவரர்
இறைவி பெயர்
பெரியநாயகி, பிருகந்நாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை வழியில் 2 கி.மி. தொலைவில் சாலையிலேயே கோயிலின் வளைவு ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் தேவஸ்தானம் என்று உள்ளது. அதனுள் நுழைந்து சென்றால் கோயிலை அடையலாம். தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய பல ஊர்களிலிருந்து முத்துப்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரி
அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருக்கோவில்
கோவிலூர், முத்துப்பேட்டை அஞ்சல், திருத்துறைப்பூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 614704
தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



No comments:

Post a Comment