Tiruvaarur Padaal Petra Sivan Temples











                                      Tiruvaarur Padaal Petra Sivan Temples










1
Tiruvarur Thiagarajaswamy Temple – திருவாரூர்
+91- 4366 - 242 343, +91- 94433 54302.
87
Kaveri out 127 temples








2
Aaroor Araneri - திருவாரூர் அரநெறி
+91- 4366 -242 343, +91-94433 54302.    all 1,2,3 Temples in one place
88
Kaveri out 127 temples








3
Aroor Paravayun Mandhali, Thoovainadhar Koil - ஆரூர் பறவையுன்மண்டளி - +91- 4366 - 240 646, 99425 40479
89
Kaveri out 127 temples








4
Thirukkeezhveloor – திருக்கீழ்வேளூர் - +91- 4366 - 276 733.
This is on the bus route Thiruvarur to Nagapattinam.
84
Kaveri out 127 temples








5
Thevur – தேவூர் - +91- 4366 - 276 113, +91-94862 78810
On the way from Keevalur to Thiruthurai poondi route.
Town bus from Thiruvarur to Valivalam passes through this place.
85
Kaveri out 127 temples








6
Thiruvilamar, Vilamal – திருவிளமர் - +91- 98947 81778 94894 79896
we have to depend one town bus which goes to medical college.
Better to take an auto from Thiruvarur bus-stand.
90
Kaveri out 127 temples








7
Thirukkaraayil, Thirukkaaraivasal – திருக்காறாயில்
+91- 4366-247 824, +91- 94424 03391.
Thiruvarur to Thirunellikka town bus passes through this place.
119
Kaveri out 127 temples








8
Thirukkandrapur, Kannappur – திருகன்றாப்பூர்
+91 -4365 - 204 144, 94424 59978
On the Thiruvarur to Thiruthurai poondi bus route get down at Maavur Koot road and from there Maruthur and from there Koil Kannapur koot road and 1 KM
120
Kaveri out 127 temples








9
Tiruvalivalam – திருவலிவலம் - +91- 4366 - 205 636
Thiruvarur to Thiruthurai Poondi bus route via Keevalur.
On the Thiruvarur to Thiruthuraipoondi road we can reach via Pulivalam and Maavur.
121
Kaveri out 127 temples








10
Tirunallurmayanam - திருநாலூர் மயானம் - +91 94439 59839
Naalur is on the way to Kudavasal from Kumbakonam and it is a vaippu sthalam. From there Naalur Mayanam is about 1 KM towards east.
96
Kaveri out 127 temples








11
Tirukollampudur – திருக்கொள்ளம்புதூர்- +91- 4366 - 262 239.
bus route Kumbakonam to Kudavasal.
From Koradachery to Kudavasal route after Abivirutheeswaram and Sellur. From Sellur Thirukkalambur is 1 KM
113
Kaveri out 127 temples








12
Karuveeli Kottittai, Karuveli - திருக்கருவிலிக்கொட்டிட்டை
63
Kaveri out 127 temples



Mobile 8940725674 / 9442932942, Kmbaknonam route no. 22 & 58,
On the bus route  from Kumbakonam to Poonthottam










13
Thiruppalliyin Mukkoodal - பள்ளியின் முக்கூடல்
9865844677
There are Two mini Buses ( Thiruvarur to Pallivaramangalam and Pallivaramangalam to Peruntharakudi via Bus stand ) available from Thiruvarur Bus stand. 
86
Kaveri out 127 temples








14
Karaveeram – திருக்கரவீரம்
This temple is on the Thiruvarur to Kumbakonam main road.
The Village name is called as Vadakandam on the Thiruvarur to Kumbakonam road. The place where to get down at Vadakandam Vettartrupaalam.
91
Kaveri out 127 temples








15
Thiruperuveloor, Manakkal Ayyanpettaiதிருப்பெருவேளுர்
All the buses  from Thiruvarur to Kumbakonam passes through this village called Manakal Iyampettai.
92
Kaveri out 127 temples








16
Thalaiyaalangadu – திருதலையாலங்காடு9443500235
5 KM from Peruvelur
93
Kaveri out 127 temples




    17
Thirukkolili, Thirukuvalai – திருக்கோளிலி
dialling this mobile 9786244876. - +91- 4366 - 329 268, 245 412.
The place is in the road diversion to Ettukudi on the Nagapattinam to Thiruthuraipoondi.
Thiruvarur to Vedharanyam bus passes through this village.


123


Kaveri out 127 temples










   18
Tiruvaimoor – திருவாய்மூர்
dialling this mobile 9786244876. +91-97862 44876
The place is in the road diversion to Ettukudi on the Nagapattinam to Thiruthuraipoondi.
Thiruvarur to Vedharanyam bus passes through this village.

124

Kaveri out 127 temples


   19
திருவிடைவாய்











87. வான்மீகிநாதர் கோவில், திருவாரூர்
சிவஸ்தலம் பெயர்
திருவாரூர் (திருமூலட்டானம் என்றும் திருவாரூர் பூங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்
வன்மீகிநாதர், புற்றிடங்கொண்ட நாதர்
இறைவி பெயர்
அல்லியங்கோதை
பதிகம்
திருநாவுக்கரசர் 21, திருஞானசம்பந்தர் 5, சுந்தரர் - 8
எப்படிப் போவது
இத்தலம் திருவாரூர் நகரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவாரூர் அரநெறி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இந்த ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. திருவாரூர் நகரின் கிழக்கு ரத வீதியில் ஆரூர் பறவயுண்மண்டளி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்
திருவாரூர், திருவாரூர் மாவட்டம் PIN - 610001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


88. அறநெறியப்பர் கோவில், திருவாரூர் அரநெறி
சிவஸ்தலம் பெயர்
திருவாரூர் அரநெறி
இறைவன் பெயர்
அரநெறியப்பர், அகிலேசுவரர்
இறைவி பெயர்
வண்டார்குழலி
பதிகம்
திருநாவுக்கரசர் - 2
எப்படிப் போவது
திருவாரூரில் உள்ள வன்மீகிநாதர் ஆலயத்தின் உள்ளே இத்தலம் அமைந்துள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு அகிலேசுவரர் திருக்கோயில்
தியாகராஜசுவாமி திருக்கோயில் தேவஸ்தானம்
திருவாரூர்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.





89. தூவாய் நாயனார் கோவில், ஆரூர் பறவயுன்மண்டளி
சிவஸ்தலம் பெயர்
ஆரூர் பரவையுண்மண்டளி
இறைவன் பெயர்
தூவாய் நாயனார்
இறைவி பெயர்
பஞ்சின் மெல்லடியம்மை
பதிகம்
சுந்தரர் - 1
எப்படிப் போவது
திருவாரூரில் கிழக்கு ரத வீதியில் இத்தலம் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு தூவாய் நாயனார் திருக்கோயில்
கீழரத வீதி
திருவாரூர் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610001

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.




84. கேடிலியப்பர் கோவில், கீழ்வேளூர்
சிவஸ்தலம் பெயர்
கீழ்வேளூர் (தற்போது கீவளூர் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
கேடிலியப்பர், அக்ஷய லிங்கேஸ்வரர்
இறைவி பெயர்
வனமுலை நாயகி, சுந்தர குசாம்பிகை
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டித்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன . நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவில் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோவில்
கீவளூர் அஞ்சல்
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 611104

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



85. தேவபுரீசுவரர் கோவில், தேவூர்
சிவஸ்தலம் பெயர்
திருத்தேவூர்
இறைவன் பெயர்
தேவபுரீசுவரர், தேவகுருநாதர், கதலிவனேசர்
இறைவி பெயர்
மதுரபாஷினி, தேன்மொழியம்மை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது
திருவாரூரில் இருந்து நாகப்பட்டிணம் செல்லும் சாலை வழியில் கீவளூரை அடைந்து, அங்கிருந்து திருத்துளைப்பூண்டி செல்லும் சாலையில் சென்றால் தேவூரை அடையலாம். திருவாரூர் - வலிவலம் நகரப்பேருந்து தேவூர் வழியாகச் செல்கிறது. தேவூரில் அக்ரஹாரம் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோயிலுக்கு எதிரிலேயே இறங்கலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில்
தேவூர், வழி கீவளூர், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 611109

தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


90. பதஞ்சலி மனோகரர் கோவில், திருவிளமர்
சிவஸ்தலம் பெயர்
திருவிளமர் (தற்போது விளமல் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
பதஞ்சலி மனோகரர்
இறைவி பெயர்
யாழினும் மென்மொழியம்மை, மதுரபாஷினி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் திருவாரூரில் இருந்து 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. விளமல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோவில் உள்லது.
ஆலய முகவரி
அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்
விளமல்
விளமல் அஞ்சல்
திருவாரூர் (வடக்கு)
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610002

காலை 7-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.






119. கண்ணாயிரநாதர் கோவில், திருக்காறாயில்
சிவஸ்தலம் பெயர்
திருக்காறாயில் (தற்போது திருக்காரவாசல் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
கண்ணாயிரநாதர்
இறைவி பெயர்
கைலாயநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 12 கி.மி. தெற்கே இத்தலம் உள்ளது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் திருநெல்லிக்கா, திருகைச்சினம், திருக்கொள்ளிலி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் உள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோவில்
திருக்காரவாசல் அஞ்சல், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம்
PIN - 610202
தினந்தோறும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


120. நடுத்தறியப்பர் கோவில், திருகன்றாப்பூர்
சிவஸ்தலம் பெயர்
திருகன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
நடுத்தறியப்பர், நடுதறிநாதர்,
இறைவி பெயர்
மாதுமை நாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது
திருவாரூரில் இருந்து 18 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு இடப்புறமாகப் பிரியும் உள்சாலையில் 1 கி.மீ. சென்றால் தலத்தையடையலாம். (கீழ கண்ணாப்பூர் என்ற ஊர் ஒன்றுள்ளது. பாடல் பெற்ற தலம் அதுவன்று. எனவே கோயில் கண்ணாப்பூர் என்று கேட்க வேண்டும்.). திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் வழியில் கோயில் கண்ணாப்பூர் நிறுத்தத்தில் இறங்கியும் கோவிலுக்குச் செல்லலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு நடுத்தறியப்பர் திருக்கோவில்
கோயில் கண்ணாப்பூர், வழி வலிவலம் S.O., திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 610202
தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



121. மனத்துனைநாதர் கோவில், திருவலிவலம்
சிவஸ்தலம் பெயர்
திருவலிவலம்
இறைவன் பெயர்
மனத்துனைநாதர், இருதய கமலநாதர்
இறைவி பெயர்
மாழையொண்கண்ணி
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் 2, சுந்தரர் 1
எப்படிப் போவது
திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். இரண்டுமே நல்ல பாதைகள்.
ஆலய முகவரி
அருள்மிகு மனத்துனைநாதர் திருக்கோவில்
வலிவலம், திருக்குவளை வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN 610207

தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


96. ஞானபரமேஸ்வரர் கோவில், திருநாலூர் மயானம்
சிவஸ்தலம் பெயர்
திருநாலூர் மயானம்
இறைவன் பெயர்
ஞானபரமேஸ்வரர்
இறைவி பெயர்
ஞானாம்பிகை, பெரியநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணம் - குடவாசல் சாலை வழியில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற தலத்தை அடுத்து வருவது நாலூர் என்ற ஊர். இவ்வூர் ஒரு தேவார வைப்புத் தலம். நாலூர் தாண்டி குடவாசல் செல்லும் வழியில் உள்ள அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் மண் சாலையில் சிறிது தூரம் சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இவ்விடம் திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது.
ஆலய முகவரி
அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
நாலூர் மயானம், திருமெய்ஞானம்,  குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 612605

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையில் மட்டும் திறந்திருக்கும்.







113. வில்வவனேசுவரர் கோவில், திருக்கொள்ளம்புதூர்
சிவஸ்தலம் பெயர்
திருக்கொள்ளம்புதூர் (தற்போது திருக்களம்புதூர், திருக்களம்பூர் என்ற பெயர்களில் வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
வில்வவனேசுவரர்
இறைவி பெயர்
சௌந்தராம்பிகை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
 (Koradacheri)கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். கோவில் வரை பாதை உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில்
திருக்களம்பூர், திருவாரூர் மாவட்டம் PIN - 622414

தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



63. சற்குண நாதேஸ்வரர் கோவில், திருக்கருவிலி கொட்டிட்டை
சிவஸ்தலம் பெயர்
திருக்கருவிலி கொட்டிட்டை (தற்போது கருவேலி என்றும், சற்குணேஸ்வரபுரம் என்றும் வழங்குகிறது)
இறைவன் பெயர்
சற்குண நாதேஸ்வரர்
இறைவி பெயர்
சர்வாங்க சுந்தரி
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடைந்து அங்கிருந்து முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் 2 கி.மி. வந்தும் கருவேலி தலத்தை அடையலாம். திருவீழிமிழிலை என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து கிழக்கில் 6 கி.மி. தொலைவிலும், வடக்கே சுமார் 4 கி.மி. தொலைவில் திருநல்லம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில் , கருவேலி (சற்குணேஸ்வரபுரம்)
 
கூந்தலூர் அஞ்சல், எரவாஞ்சேரி S.O., தஞ்சாவூர் மாவட்டம்
PIN – 605501
காலை 7 மணி to 1 மணி and மாலை 4 மணி முதல் இரவு 8 மணி





86. முக்கோண நாதேசுவரர் கோவில், திரு பள்ளியின்முக்கூடல்
சிவஸ்தலம் பெயர்
திரு பள்ளியின்முக்கூடல்
இறைவன் பெயர்
திரிநேத்ர சுவாமி, முக்கூடல்நாதர், முக்கோண நாதர்
இறைவி பெயர்
அஞ்சனாட்சி, மைமேவு கண்ணியம்மை
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது
இத்தலம் நன்னிலத்திற்கு அருகில் உள்ள திருவிற்குடி சிவஸ்தலத்தில் இருந்து 3 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருவாரூரிலிருந்து கடைத் தெரு வழியாகக் கேக்கரை செல்லும் சாலையில் வந்து, ரயில்வே லெவல்கிராசிங்கைத் தாண்டி கேக்கரையை அடைந்து, அங்கிருந்து அதே சாலையில் மேலும் 1 கி.மீ. சென்று சிறிய பாலத்தைத் தாண்டி சிறிது தூரம் சென்று, அங்கு இரண்டாகப் பிரியும் பாதையில் இடப்பக்கமாகச் செல்லும் பாதையில் 1 கி.மீ. சென்றால் ஊரையடையலாம். பேருந்து ஊர் வரை செல்லும்.
ஆலய முகவரி
அருள்மிகு முக்கோண நாதேசுவரர் திருக்கோயில்
திருப்பள்ளி முக்கூடல், கேக்கரை அஞ்சல், வழி திருவாரூர்,
திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 610002
தினந்தோறும் காலை 11மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.



91. கரவீரநாதர் கோவில், திருகரவீரம்
சிவஸ்தலம் பெயர்
திருகரவீரம் (தற்போது வடகண்டம் கரையபுரம் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
கரவீரநாதர், பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்
பிரத்தியட்சமின்னம்மை, பிரத்யக்ஷ நாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருவாரூரில் இருந்து மேற்கே 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கரையபுரம் செல்லும் வழி என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோவிலை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும். கோவில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு கரவீரநாதர் திருக்கோயில்
கரையபுரம்., மணக்கால் ஐயம்பேட்டை அஞ்சல்,
திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 610104
தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



92. பிரியாதநாதர் கோவில், திருப்பெருவேளூர்
சிவஸ்தலம் பெயர்
திருப்பெருவேளூர் (தற்போது மணக்கால் ஐயம்பேட்டை என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
பிரியாதநாதர், அபிமுக்தீஸ்வரர், பிரியாஈஸ்வரர்
இறைவி பெயர்
ஏலவார்குழலி
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்தி திருவாரூர் செல்லும் சாலையில் மணக்கால் என்ற இடத்தில் இறங்கி 1/2 கி.மி சென்றால் இத்தலம் அடையலாம். தலையாலங்காடு என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 6 கி.மி. தொலைவிலும், கொரடாச்சேரி என்ற ஊரில் இருந்து 14 கி.மி. தூரத்திலும் இத்தலம் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில்
மணக்கால் ஐயம்பேட்டை
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN – 610104

தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



93. ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் கோவில், திருதலையாலங்காடு
சிவஸ்தலம் பெயர்
திருதலையாலங்காடு
இறைவன் பெயர்
ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர், ஆடல்வல்லநாதர்
இறைவி பெயர்
ஸ்ரீபாலாம்பிகை, திருமடந்தை அம்மை
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது
கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே 8.கி.மி. தொலைவிலும் திருப்பெருவேளூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 6 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு ஆடவல்லநாதர் திருக்கோயில்
தலையாலங்காடு, செம்பங்குடி அஞ்சல், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 612603

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். அருகிலேயே அர்ச்சகர் இல்லம் உள்ளதால் எப்போதும் தரிசிக்கலாம்.








123. கோளிலிநாதர் கோவில், திருக்கோளிலி
சிவஸ்தலம் பெயர்
திருக்கோளிலி (தற்போது திருக்குவளை என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
கோளிலிநாதர்
இறைவி பெயர்
வண்டமர் பூங்குழலி
பதிகம்
திருநாவுக்கரசர் 2, திருஞானசம்பந்தர் 1, சுந்தரர் - 1
எப்படிப் போவது
திருவாரூரில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் எட்டுக்குடி செல்லும் சாலையில் இத்தலம் இருக்கிறது. திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோவில்
திருக்குவளை, திருக்குவளை அஞ்சல், திருக்குவளை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் PIN 610204

தினந்தோறும் காலை 7 மணி முதல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



124. வாய்மூர்நாதர் கோவில், திருவாய்மூர்
சிவஸ்தலம் பெயர்
திருவாய்மூர்
இறைவன் பெயர்
வாய்மூர்நாதர்
இறைவி பெயர்
பாலினும் நன்மொழியம்மை
பதிகம்
திருநாவுக்கரசர் 2, திருஞானசம்பந்தர் 1
எப்படிப் போவது
திருவாரூரில் இருந்து 24 கி.மி. தொலைவிலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 13 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி எட்டிக்குடி செல்லும் பாதையில் சென்று இத்தலம் செல்லலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில்
திருவாய்மூர், வழி திருக்குவளை S.O., நாகப்பட்டினம் வட்டம், 
நாகப்பட்டினம் மாவட்டம் PIN 610204

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


                            திருவிடைவாயில்

இறைவர் திருப்பெயர்               : விடைவாயப்பர், புண்ணியகோட்டீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்            : உமையம்மை, அபிராமி.
தல மரம்                                   : 
தீர்த்தம்                            : புண்ணியகோடி தீர்த்தம்.
வழிபட்டோர்                        : 
தேவாரப் பாடல்கள்                 : சம்பந்தர் - மறியார் கரத்தெந்தையம்.
தல வரலாறு
  • சோழநாட்டு காவிரி தென்கரையில் இது 114வது தலமாகும்.
·         இத்தலம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டத் திருமுறைத் தலமாகும். கி. பி. 1917ல் இத்தலம் கண்டெடுக்கப்பட்டது. மேடு ஒன்றினை வெட்டியெடுக்கும்போது உள்ளே கோயில் இருந்ததாகவும், தோண்டிப் பார்க்கையில் கோயிலுக்குள் அத்தலத்தைப் பற்றிய திருஞானசம்பந்தர் தேவாரம் கல்வெட்டில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
சிறப்புக்கள்
·         ஐயடிகள் காடவர்கோன் தம்முடைய க்ஷேத்திரக் கோவையில் "தென் இடைவாய்" என்று குறிப்பிட்டுப் பாடுகிறார்.
  • கோயிலில் தலப்பதிக கல்வெட்டு உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர் மாவட்டம், கொரடாச்சேரி - கூத்தாநல்லூர் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் பிரியும் "திருவிடைவாயில்" என்னும் வழிகாட்டிப் பாதையில் 2 கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தற்போது திருவிடைவாயில் என்று வழங்குகிறது.
+91- 4366-232 853,94433 32853, 99431 52999



No comments:

Post a Comment