Papanasam Padaal Petra Sivan Temples





                                              Papanasam Padaal Petra Sivan Temples










1
Thiruppalaithurai – திருப்பாலைத்துறை
+91-94435 24410
119
Kaveri out 127 temples








2
Thiruvaikavoor – திருவைகாவூர்+91-94435 86453, 96552 61510
48
Kaveri out 63 temples








3
Thiruvisaiyamangai – திருவிசயமங்கை+91- 435- 294 1912, 94435 86453, 93443 30834
47
Kaveri out 63 temples








4
Vadakurangaduthurai (aaduthurai perumal koil) – வடகுரங்காடுதுறை
+91 4374 240 491, 244 191
49
Kaveri out 63 temples








5
Thirukkarugavoor – திருக்கருகாவூர்Bus from Kumbakonam 11 & 52.
+91- 4374 -273 502, 273 423, 97891 60819
18
Kaveri out 127 temples








6
Thirunalloor – திருநல்லூர்+91 93631 41676
20
Kaveri out 127 temples








7
Avoor Pasupatheeswaram - ஆவூர் பசுபதீச்சரம் - (கோவந்தகுடி)
+91 94863 03484
21
Kaveri out 127 temples








8
Chakkarapalli(Ayyampettai) - திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை)
Please Check that the Temple is Opened (Normally it is Not Opened)
+91-4374-311 018
17
Kaveri out 127 temples








9
Thiruppullamangai (Pasupathikoil) - திருபுள்ளமங்கை
16
Kaveri out 127 temples








10
Kaduvaaikkarai Puthur (Aandar Koil) – திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து எண் A20 கோவில் வழியாகச் செல்கிறது.+91- 4374-265 130.
97
Kaveri out 127 temples








11
Thiru Irumboolai, Aalangudi - B719திருஇரும்பூளை (ஆலங்குடி)
+91-4374-269 407
98
Kaveri out 127 temples
























19. பாலைவன நாதர் கோவில், திருப்பாலைத்துறை
சிவஸ்தலம் பெயர்
திருப்பாலைத்துறை
இறைவன் பெயர்
பாலைவன நாதர்
இறைவி பெயர்
தவளவெண்ணகையம்மை
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் NH45C தேசீய நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசத்தை அடுத்து 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. சாலை அருகிலேயே கோவில் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பாபநாசம் வர பேருந்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரி
அருள்மிகு பாலைவன நாதர் திருக்கோவில்
திருப்பாலைத்துறை, பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம் PIN -

தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதலி இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



48. வில்வவனநாதர் கோவில், திருவைகாவூர்
சிவஸ்தலம் பெயர்
திருவைகாவூர்
இறைவன் பெயர்
வில்வவனநாதர்
இறைவி பெயர்
சர்வஜனரட்சகி, வளைக்கை அம்மை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை வழியாக நகரப் பேருந்து வசதிகள் திருவைகாவூர் செல்ல இருக்கின்றன. சுவாமிமலையிலிருந்து நாகுகுடி என்ற ஊருக்குச் செல்லும் கிளைப்பாதையில் நாகுகுடி சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்
திருவைகாவூர், திருவைகாவூர் அஞ்சல், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612301

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





47. விஜயநாதர் கோவில், திருவிசயமங்கை
சிவஸ்தலம் பெயர்
திருவிசயமங்கை (தற்போது கோவிந்தாபுத்துர் என்று அழைக்கபடுகிறது)
இறைவன் பெயர்
விஜயநாதர், விஜயநாதேஸ்வரர்
இறைவி பெயர்
மங்கைநாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் 1
எப்படிப் போவது
கும்பகோணம் - திருவைகாவூர் சாலை வழித்தடத்தில் கொள்ளிட ஆற்றின் வடகரையில் உள்ள கோவிந்தாபுத்துர் என்ற இடத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம். சுவாமி மலைக்கு மேற்கிலுள்ள அண்டக்குடி என்னும் ஊரிலிருந்தும் இத்தலத்தை அடையலாம். மற்றொரு சிவஸ்தலமான திருவைகாவூரில் இருந்து ஆற்றோரமாக இடதுபுறம் திரும்பிச் செல்லும் கிளைப்பாதையில் 2 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு விஜயநாதர் திருக்கோவில்
திருவிசயமங்கை, புள்ளபூதங்குடி அஞ்சல், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612301
இவ்வாலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.


49. தயாநிதீஸ்வரர் கோவில், வடகுரங்காடுதுறை
சிவஸ்தலம் பெயர்
வடகுரங்காடுதுறை
இறைவன் பெயர்
தயாநிதீஸ்வரர், குலைவணங்குநாதர், வாலிபுரீஸ்வரர், அழகுசடைமுடிநாதர்
இறைவி பெயர்
அழகுசடைமுடி அம்மை, ஜடாமகுட நாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணம்- திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில்
ஆடுதுறை பெருமாள் கோவில், உள்ளிக்கடை அஞ்சல்,
வழி கணபதி அக்ரஹாரம், பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 614202
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


18. முல்லைவன நாதர் கோவில், திருக்கருகாவூர்
சிவஸ்தலம் பெயர்
திருக்கருகாவூர்
இறைவன் பெயர்
முல்லைவன நாதர்
இறைவி பெயர்
கர்ப்ப ரக்ஷாம்பிகை
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 20 கி.மி. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து வடகிழக்கே 20 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கருகாவூர் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள், இதர வாகனங்கள் மூலமாக இத்தலத்தை சுலபமாக அடையலாம்..
ஆலய முகவரி
அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோவில்
திருக்கருகாவூர், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 614302
தொலைபேசி: 04374 273423
தினந்தோறும் காலை 5-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


20. கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், திருநல்லூர்
சிவஸ்தலம் பெயர்
திருநல்லூர்
இறைவன் பெயர்
கல்யாண சுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவி பெயர்
கல்யாணசுந்தரி, கிரிசுந்தரி
பதிகம்
திருநாவுக்கரசர் 2, திருஞானசம்பந்தர் - 3
எப்படிப் போவது
தஞ்சாவூர் - கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ள ஊர் பாபநாசம். பாபநாசத்தை அடுத்து வரும் வாழைப்பழக்கடை என்ற ஊரில் இருந்து பிரியும் சாலையில் 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 28 கி.மி. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. பாபாநாசத்தில் இருந்து வாழைப்பழக்கடை வழியாக கோவிந்தக்குடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
திருநல்லூர் கிராமம், (வழி) சுந்தரப்பெருமாள் கோயில்,
வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 614208.
தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



21. பசுபதீஸ்வரர் கோவில், ஆவூர் பசுபதீச்சரம்
சிவஸ்தலம் பெயர்
ஆவூர் பசுபதீச்சரம்
இறைவன் பெயர்
பசுபதீஸ்வரர்
இறைவி பெயர்
மங்களாம்பிகை, பங்கஜவல்லி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து 10 கி.மி. தொலைவில் கோவிந்தகுடி, மெலட்டூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் கோவிந்தகுடியை அடுத்து ஆவூர் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே 6 கி.மி. தொலைவில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
ஆவூர், ஆவூர் அஞ்சல், வலங்கைமான் வட்டம், தஞ்சை மாவட்டம் PIN - 612701
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


17. சக்ரவாகேஸ்வரர் கோவில், திருசக்கரப்பள்ளி
சிவஸ்தலம் பெயர்
திருசக்கரப்பள்ளி (தற்போது அய்யம்பேட்டை என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
சக்ரவாகேஸ்வரர்
இறைவி பெயர்
ஸ்ரீசக்ரலோக நாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
தஞ்சாவூரில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள அய்யம்பேட்டை என்ற ஊரில் நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது. சாலையில் திருக்கோயிலின் பெயர்ப் பலகை உள்ளது. அய்யம்பேட்டை என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் அய்யம்பேட்டை என்று கூறுகின்றனர். ஊர்ப் பெயர் அய்யம்பேட்டை. கோயிலிருக்கும் பகுதி சக்கரப்பள்ளி என்று வழங்குகிறது.
ஆலய முகவரி
அருள்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோவில்
அய்யம்பேட்டை, அய்யம்பேட்டை அஞ்சல், தஞ்சை மாவட்டம் PIN – 614201, தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.



16. ஆலந்துறை நாதர் கோவில், திருப்புள்ளமங்கை
சிவஸ்தலம் பெயர்
திருப்புள்ளமங்கை (தற்போது பசுபதிகோவில் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
ஆலந்துறை நாதர், பசுபதி நாதர்
இறைவி பெயர்
அல்லியங்கோதை, சௌந்தரநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டையைத் தாண்டி, மாதாகோயிலிடத்தில் வலப்புறமாகப் பிரியும் கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் பசுபதி கோயிலை அடையலாம். தஞ்சையிலிருந்து பசுபதி கோயிலுக்குப் பேருந்து வசதியுண்டு. திருவையாறு - கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது.
ஆலய முகவரி
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதி கோயில், பசுபதி கோயில் அஞ்சல், தஞ்சை மாவட்டம் PIN - 614 206, இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி திறந்திருக்கும்.

97. சொர்ணபுரீசுவரர் கோவில், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (தற்போது இத்தலம் ஆண்டான்கோவில் என்று வழங்குகிறது)
சிவஸ்தலம் பெயர்
திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (தற்போது ஆண்டான்கோவில் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
சொர்ணபுரீசுவரர்
இறைவி பெயர்
சிவாம்பிகை, சொர்ணாம்பிகை
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து எண் A20 கோவில் வழியாகச் செல்கிறது. தஞ்சாவூரில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகள் ஆண்டான்கோவில் வழியாகச் செல்கின்றன். ஆண்டான்கோவில் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மி. நடந்தால் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்
ஆண்டான்கோவில், வலங்கைமான் S.O.,
திருவாரூர் மாவட்டம் PIN – 612804.
காலை 8 மணி பகல் 12 மணி மாலை 4 மணி முதல் இரவு 8 வரையிலும்










98. ஆபத்சகாயேசுவரர் கோவில், திருஇரும்பூளை (ஆலங்குடி)
சிவஸ்தலம் பெயர்
திருஇரும்பூளை (தற்போது ஆலங்குடி என்ற பெயரில் அறியப்படுகிறது)
இறைவன் பெயர்
ஆபத்சகாயேசுவரர்
இறைவி பெயர்
ஏலவார் குழலியம்மை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. நவக்கிரக ஸ்தலங்களில் ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது.
ஆலய முகவரி
அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோவில்
ஆலங்குடி, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம்
PIN – 612801
தொலைபேசி: 04374 269407
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

No comments:

Post a Comment